சோழமாதேவி கோவிலில் சிறப்பு யாகம்
ADDED :1397 days ago
மடத்துக்குளம்: மடத்துக்குளம் சோழமாதேவியில் குங்குமவல்லி அம்மன் குலசேகர சுவாமி கோவிலில் சிறப்பு யாகம் நடந்தது. மடத்துக்குளம் தாலுகா சோழமாதேவியில் விளை நிலங்களுக்கு மத்தியில் குங்குமவல்லி அம்மன் உடனமர் குலசேகர சுவாமி கோவில் உள்ளது. பொதுமக்கள் மற்றும் அறங்காவலர்கள் குழுவினர் கோவில் வளாகத்தில் சிறப்பு யாகம் நடத்தினர்.தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், சிறப்புஅலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து, கோவில் அறங்காவலர்கள்கூறுகையில், இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பியுள்ள நிலையில், காலை முதல் மாலை வரை பூஜைகள் நடக்கிறது என்றனர்.