உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மமுனீஸ்வரர் கோயிலில் அரியவகை வில்வாகை மரம்: பக்தர்கள் வழிபாடு

தர்மமுனீஸ்வரர் கோயிலில் அரியவகை வில்வாகை மரம்: பக்தர்கள் வழிபாடு

சாயல்குடி: சாயல்குடி அருகே கூராங்கோட்டை தர்ம முனீஸ்வரர் கோயில் வளாகத்தை சுற்றிலும் அரியவகை வில்வாகை மரங்கள் நிறைந்து காணப்படுகிறது.பழமையான வில்வாகை மரங்களின் மேற்புறத் தோற்றம் பாம்புகளை போன்று செதில் செதிலாகவும், வில்வ இலை போன்றும், மிளகு வடிவத்தில் சிவப்பு நிற காய்கள் அறுசுவை கொண்டதாகவும் உள்ளது. கோயிலை சுற்றிலும் 60க்கும் மேற்பட்ட வில்வாகை மரங்கள் நிறைந்து பூஞ்சோலையாக காணப்படுகிறது. இதுபோன்ற மரங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. கோயில் பூஜகர் வரதராஜன் கூறியதாவது; இங்குள்ள வில்வாகை மரம் 300 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக உள்ளது. கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் இம்மரங்களை தொட்டு வணங்கி செல்கின்றனர். குழந்தை பேறு இல்லாதவர்கள் உடல் நலக் குறைபாடு உள்ளவர்களுக்கு இம்மரத்தின் இலைகள், திருநீருடன் சேர்த்து வழங்குகின்றோம். அவற்றினை அரைத்து நீருடன் பருகிவர குணமாகும் என்ற நம்பிக்கை நிலவுகிறது என்றார். பழமையான வில்வாகை மரங்களை பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !