உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் கோபுரத்தில் வளர்ந்த செடிகள் அகற்றம்

ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் கோபுரத்தில் வளர்ந்த செடிகள் அகற்றம்

திருவாடானை: திருவாடா னையில் ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ராஜகோபுரத்தில் தினமலர் செய்தி எதிரொலியாக செடிகள் அகற்றப்பட்டது. திருவாடானையில் ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ராஜகோபுரத்தில் செ டிகள் வளர்ந்திருந்தது. இதனால் சிலைகள் சேதமடைந்ததோடு , கோபுரத்தின் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டது. இச்செய்தி தினமலர் நாளிதழில் பட த்துடன் வெளியானது. இதையடுத்து கோபுரம் உச்சியிலிருந்து கயிறு மூலம் இறங்கி செடிகளை வெட்டி அழித்தனர். மீண்டும் வளராத வகையில் திரவங்களை ஊற்றி சிமென்டால் துவாரங்களை அடைத்தனர். இது குறித்து தே வஸ்தான அலுவலர்கள் கூறியதாவது– இப்பணி நேற்று முதல் நடந்து வருகிறது. இன்னும் இரு நாட்களில் முடியம். சுற்று பிரகாரங்களில் தரையில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றும் பணிகளும் நடந்து வருகிறது, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !