தென்னம்பிள்ளை வலசையில் மண்டல பூஜை
ADDED :1473 days ago
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் அருகே தென்னம்பிள்ளை வலசையில் மயூரநாதசுவாமி மற்றும் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் கடந்த அக்., 24 அன்று நடந்தது. 48வது நாள் மண்டல பூஜையை முன்னிட்டு நேற்று காலை 10 மணி அளவில் ஹோம வேள்விகள் செய்யப்பட்டு கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மூலவர் மயூரநாதசுவாமி, பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், மகா கணபதி, மீனாட்சி, சோமசுந்தரேஸ்வரர், ஆஞ்சநேயர், நவகிரகங்கள், காலபைரவர், ஏகானந்த சுவாமி ஆகியோருக்கு அபிஷேக ஆராதனைகள், அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் விழா குழுவினர் செய்திருந்தனர்.