கடலூர் ராஜகோபால சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :1471 days ago
கடலூர்: கடலூர், புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி கோயிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கடலுார், புதுப்பாளையத்தில் செங்கமல வல்லி தாயார் சமேத ராஜகோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது. திவ்ய தேசங்களில் ஒன்றான திருவந்திபுரம் தேவநாத சுவாமிக்கு அபிமான ஸ்தலமாக இது விளங்குகிறது. இக்கோவிலுக்கு கடந்த 2003ம் ஆண்டில் ஸம்ப்ரோக் ஷணம் நடந்தது. அதையடுத்து 17 ஆண்டு களுக்கு பின் நேற்று காலை ஸம்ப்ரோக் ஷணம் நடைபெற்றது. தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. திருக்கல்யாண உற்சவத்தில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 8:00 மணிக்கு புதிய இந்திர விமானத்தில் உபயநாச்சியார் சமேதமாக பெருமாள் கோவில் உள்பிரகார புறப்பாடு நடைபெற்றது. பக்தர்கள தரிமனம் செய்தனர்.