சிதம்பரம் நடராஜர் கோவில் 4 கோபுரத்திலும் மோட்ச தீபம்
ADDED :1503 days ago
சிதம்பரம்: இந்தியாவின் முப்படை தளபதி பிபின் ராவத் வீர மரணத்தை ஒட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் 4 கோபுரத்திலும் மோட்சதீபம் ஏற்றப்பட்டது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இக்கோவிலின் தெற்கு வீதி மற்றும் கீழ வீதியில் உள்ள ராஜகோபுரத்தில் இறந்தவர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டுமென மோட்ச தீபம் ஏற்றுவது வழக்கம். இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் முதல்முறையாக இந்தியாவில் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் 12 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் வீர மரணம் அடைந்ததையொட்டி கோவிலில் ராஜகோபுரம் உள்ளிட்ட நான்கு வீதி கோபுரங்களிலும் கோவில் பொது தீட்சிதர்கள் சார்பில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. இக்கோவிலில் முதல் முறையாக நான்கு கோபுரத்திலும் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.