உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.3 கோடி மதிப்புள்ள ஆபரணம் நன்கொடை

திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.3 கோடி மதிப்புள்ள ஆபரணம் நன்கொடை

திருப்பதி: திருமலை ஏழுமலையானுக்கு 3 கோடி ரூபாய் மதிப்பிலான அபய, வரத ஹஸ்தம் எனப்படும் கை ஆபரணம் நன்கொடையாக வழங்கப்பட்டது. திருமலை ஏழுமலையானுக்கு பெயர் சொல்ல விரும்பாத பக்தர் ஒருவர், 5.3 கிலோ எடையுள்ள வைரம், மாணிக்கம் உள்ளிட்ட விலை மதிப்புள்ள கற்கள் பதிக்கப்பட்ட அபய, வரத ஹஸ்தம் இரண்டையும் நன்கொடையாக வழங்கினார்.இவற்றின் மதிப்பு 3 கோடி ரூபாய். இவற்றை அவர் நேற்று காலை ஏழுமலையானை தரிசனம் செய்து முடித்த பின் ரங்கநாயகர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரியிடம் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !