தலைமை தளபதிக்கு ராமேஸ்வரம் அக்னி கரையில் மோட்ச தீபம்
ADDED :1400 days ago
ராமேஸ்வரம்: ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த தலைமை தளபதி பிவின்ராவத் உள்ளிட்ட 13 பேருக்கு ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் பொதுமக்கள் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். முப்படை தலைமை தளபதி பிவின் ராவத் உள்ளிட்ட 13 ராணுவ அதிகாரிகள், வீரர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர். இவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் பொதுமக்கள் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இதில் சமுத்திர ஆரத்தி இயக்கம் நிர்வாகி நாகராஜன், முன்னாள் ராணுவ வீரர் பூபதி, வெற்றிவேர் கூட்டமைப்பு நிர்வாகி ஸ்ரீராம், பா.ஜ., நகர் துணை தலைவர் ராமு, கலை, கலாச்சார பிரிவு மாவட்ட தலைவர் ஆறுமுகம்லிங்கம், வாழும் கலை இயக்க நிர்வாகி சுடலை, தீவு படைவீரர் நல சங்க தலைவர் சுதாகர், பொதுமக்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.