பூத வாகனத்தில் மன்னீஸ்வரர் உலா
ADDED :1443 days ago
அன்னூர்: தேர்த்திருவிழாவில், மன்னீஸ்வரர் பூத வாகனத்தில், உலா வந்து அருள் பாலித்தார். அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 11ம் தேதி காலை சூரிய வாகனத்திலும், மாலையில் சந்திர வாகனத்திலும், மன்னீஸ்வரர் உட்பிரகாரத்தில் உலா வந்து அருள் பாலித்தார். நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு, பூத வாகனத்தில், அருந்தவச் செல்வி உடனமர் மன்னீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் உள்பிரகாரத்தில் உலா வந்தார். இன்று காலை 10:30 மணிக்கு, பஞ்சமூர்த்திகளுக்கு, அபிஷேகமும், மதியம் அன்னதானம் வழங்குதலும் நடக்கிறது. மாலையில், விநாயகர், அம்மன், சந்திரசேகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் உள்பிரகாரத்தில் உலா வந்து, அருள் பாலிக்கின்றனர்.