உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி, யாக சாலை பூஜையில் பெருந்தேவி தாயாருடன் எழுந்தருளி பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்புமேற்கு ராஜகோபுரம் மீது புனித நீர் ஊற்றப்பட்டது. கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, தினமலர் சார்பில் சிறப்பிதழ் வெளியிடப்பட்டது. கோவில் முன்பு பக்தர்களுக்கு சிறப்பிதழ் மற்றும் மோர் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை காண, சன்னதி தெருவில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !