உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மார்கழி பூஜைக்காக ஸ்ரீவி., கோயில்களில் அதிகாலை நடை திறப்பு

மார்கழி பூஜைக்காக ஸ்ரீவி., கோயில்களில் அதிகாலை நடை திறப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்: நாளை ( டிச.16) மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவுள்ளனர். இதன்படி மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில், பெரிய மாரியம்மன் கோயில், வத்திராயிருப்பு காசி விசுவநாதர் கோயில், சேது நாராயணப் பெருமாள் கோயில்களில் அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. மார்கழி மாதம் பிறக்கும் நேரம் நாளை (டிச.16) காலை 9:20 மணி என்பதால் ஆண்டாள் கோயிலில் மட்டும் டிசம்பர் 17 முதல் அதிகாலை 4 மணிக்கும், 4:30 மணிக்கு பெரிய பெருமாள் கோயிலும் நடை திறக்கப்படுகிறது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !