உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காசி விஸ்வநாதர் ஆலயத்தில் முதல்வர் பசவராஜ் தரிசனம்

காசி விஸ்வநாதர் ஆலயத்தில் முதல்வர் பசவராஜ் தரிசனம்

வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தை, முதல்வர் பசவராஜ் பொம்மை தன் மனைவியுடன் சென்று தரிசித்தார்.

உத்தர பிரதேசம் வாரணாசியில் புதுப்பிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்வர் பசவராஜ் பொம்மை, தன் மனைவி சென்னம்மாவுடன் சிறப்பு விமானத்தில் வாரணாசி சென்றிருந்தார். கங்கை ஆற்றங்கரையில் மோடியுடன் படம் எடுத்து கொண்டனர்.மஹா ஆரத்தி நிகழ்ச்சியை தரிசித்தனர். நேற்று காலை காசி விஸ்வநாதரை தரிசித்து பூஜை செய்து வழிபட்டனர். பின்னர் நடந்த பா.ஜ., ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மாநாட்டில் பசவராஜ் பொம்மை பங்கேற்றார்.பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, தேசிய அமைப்பு பொது செயலர் சந்தோஷ், மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் ஆகிய முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசித்தார்.
- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !