உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன், பெருமாள் கோயில்களில் மார்கழி உற்சவம்: பக்தர்கள் வழிபாடு

சிவன், பெருமாள் கோயில்களில் மார்கழி உற்சவம்: பக்தர்கள் வழிபாடு

பரமக்குடி: பரமக்குடியில் உள்ள பெருமாள், சிவன் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் மார்கழி மகா உற்சவம் துவங்கியது. மார்கழி மாதம் முழுவதும் சைவ, வைணவ கோயில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்துவது வழக்கம். இதன்படி பெருமாள் கோயில்களில் ஆண்டாள் அருளிய திருப்பாவை, சிவன் கோயிலில் மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை பாடப்படும். தொடர்ந்து மார்கழி உற்சவத்தின் முதல் நாளில் திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடத்தப்பட்டன. பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள், ஈஸ்வரன், மீனாட்சி சுந்தரேஸ்வரர், எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள், எமனேஸ்வரமுடையவர், நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. சிவன் கோயில்களில் டிசம்பர் 11 மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டுதலுடன் ஆருத்ரா தரிசன விழா துவங்கியது. தொடர்ந்து டிச., 19 இரவு நடராஜர் ஆனந்த தாண்டவம் மற்றும் மறுநாள் காலை ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. இதேபோல் அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, கூடாரவல்லி, சிவபெருமான் படி அருளிய லீலை என அனைத்து விழாக்களும் கொண்டாடப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !