மார்கழி, பிரதோஷம், கிருத்திகை: பெரியகுளம் கோயில்களில் குவிந்த பக்தர்கள்
ADDED :1403 days ago
பெரியகுளம்: பெரியகுளம் தேவதானப்பட்டி கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. மார்கழி 1 பிரதோஷம் கிருத்திகை விரதம் மூன்றும் ஒரே நாளில் வந்தது பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில், காளஹஸ்தீஸ்வரர் கோயில், வரதராஜபெருமாள் கோயில், கம்பம் ரோடு காளியம்மன் கோயில்,வரசித்தி விநாயகர் கோயில்,சங்க விநாயகர் கோயில், தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில், வைத்தீஸ்வரன் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. அர்ச்சகர் ஸ்ரீராம் கூறுகையில், மார்கழி முதல் நாளில் இவ்வாறு அமைவது அபூர்வமாகும். பக்தர்களுக்கு சகல ஐஸ்வர்யம் கிடைக்கும் என்றார்.