அலகுமலை கோவில் கும்பாபிஷேகம்; முகூர்த்தக்கால் நட்டு சிறப்பு பூஜை
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், பெருந்தொழுவு ரோட்டில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்துகுமாரசாமி, பாலதண்டாயுதபாணி கோவில் அமைந்துள்ளது. திருப்பூரில் இருந்து, 22 கி.மீ., தொலைவில், அலகுமலை அமைந்துள்ளது.கோவிலில், 2022 ஜன., 23ல் கும்பாபி ேஷகம் நடக்கிறது. இதற்கான யாகசாலை கட்டுமானத்துக்கு முகூர்த்தக்கால் பூஜை நடந்தது. இக்கோவிலுக்கு நடந்து செல்லும் பாதை, படிக்கட்டுகள் புதுப்பிக்கப்பட்டு, கிரிவலப்பாதையில் மின்விளக்குள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த திருப்பணி மற்றும் புதியதாக திருமண மண்டபம், மேற்கூரை உள்ளிட்ட நான்கு கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. வரும், 2022ம் ஆண்டு, ஜன., 23ம் தேதி கோவில் கும்பாபிேஷக விழா நடக்கவுள்ளது. இதற்காக முதல்கட்டமாக முகூர்த்தக்கால் பூஜை நடந்தது. இதில், எவரெடி ஸ்பின்னிங் மில்ஸ் சுப்ரமணியம், கே.எம்., நிட்வேர் உரிமையாளர் சுப்ரமணியம், தேவி பேக்கரி சுவாமிநாதன், பொங்கலுார் ஊராட்சி தலைவர் குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.