உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் மாதம், திருப்பாவை உற்சவம்

புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் மாதம், திருப்பாவை உற்சவம்

பெண்ணாடம் ; பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில், மார்கழி மாதம், திருப்பாவை உற்சவம் நாளை (16ம் தேதி) முதல் துவங்குகிறது.

இதையொட்டி நாளை (16ம் தேதி) அதிகாலை 4:30 மணியளவில் நடை திறப்பு; 5:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. காலை 5:15 மணியளவில் பிரகாரத்தில் உள்ள ஆண்டாள் நாச்சியாருக்கு விசேஷ திருமஞ்சனம், திருப்பாவை பாசுரம் பாடும் நிகழ்ச்சி, 5:30 மணியளவில் மகா தீபாராதனை நடக்கிறது. தினசரி திருப்பாவை, திருவெம்பாவை பாடுதல்; நட்சத்திர வழிபாடு நிகழ்ச்சி நடக்கிறது. மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை முதல் பிற்பகல் 12:00 மணி; மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் கோதண்டராமன், புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !