பத்மாவதி தாயாருக்கு தங்க ஒட்டியானம்
ADDED :4850 days ago
நகரி:திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலுக்கு, பெண் பக்தர் ஒருவர், 260 கிராம் எடையுள்ள தங்க ஒட்டியானத்தை, காணிக்கையாக வழங்கினார்.கிருஷ்ணா மாவட்டம், உய்யூர் அடுத்த காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் ஜோதி. இவர், திருச்சானூர் கோவிலில், மூலவரான பத்மாவதி தாயாருக்கு, பூஜை நேரங்களில் அலங்கரிப்பதற்கு வசதியாக, தங்க ஒட்டியானத்தை தயார் செய்து, கோவில் அதிகாரிகளிடம், நேற்று முன்தினம் காணிக்கையாக வழங்கினார்.அர்ச்சகர்கள், இந்த ஒட்டியானத்தை, தாயார் சன்னதியில் வைத்து பூஜை செய்தனர். இதன் மதிப்பு, 11 லட்ச ரூபாய் என, கோவில் அதிகாரி வேணுகோபால் தெரிவித்தார்.