உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

மதுரை: மதுரை, இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, நடராஜ பெருமானுக்கு  மகா அபிஷேகம் நடைபெற்றது.

சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மேதகு ராணி டிஎஸ்கே மதுராந்தகி நாச்சியார் அவர்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் 1430 பசலி மார்கழி திருவாதிரை முன்னிட்டு நடராஜப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை தீபாராதனை நடைபெற்றது. கோவில் பிரகாரத்தில் பஞ்சமூர்த்தி புறப்பாடு உள் புறப்பாடு நடைபெற்றது. ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !