பரமக்குடியில் நாயகி சுவாமி திருஅவதார தின உற்ஸவம்
ADDED :1387 days ago
பரமக்குடி : பரமக்குடியில் நடன கோபால நாயகி சுவாமிகளின் திரு அவதார தின உற்ஸவம் நடந்தது. மதுரையில் பிறந்த நாயகி சுவாமிகள் அழகர்கோவில் அருகே காதக்கிணறு என்ற இடத்தில் சமாதி அடைந்தார். இவரது திரு அவதார தினம் பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் நடந்தது.இக்கோயிலில் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் நாயகி சுவாமிகளுக்கு காலையில் சிறப்பு ஹோமங்கள், அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து சுவாமிகளின் கீர்த்தனை,பஜனைகளை பாடியபடி உற்ஸவருடன், பக்தர்கள் வீதி வலம் வந்தனர்.கோயிலில் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு வழிபாடு நடந்தது. ஏராளமான பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.