உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்திர சபை: குற்றாலநாதர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் விமரிசை

சித்திர சபை: குற்றாலநாதர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் விமரிசை

தென்காசி: குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் (சித்திர சபை) ஆருத்ரா தரிசனம் விமரிசையாக நடந்தது.

புகழ்பெற்ற குற்றாலநாதர் கோவிலில் திருவாதிரை ஆருத்ரா தரிசன விழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்ளில் சுவாமி அம்பாள் உலா நடைபெற்றது. சித்திர சபையில் உள்ள நடராசபெருமானுக்கு நடைபெறும் சிறப்புமிக்க மார்கழி திருவாதிரை திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது. ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, திரிகூட மண்டபத்தில் தாண்டவ தீபாராதனை நடைபெற்றது. சிறப்பபு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !