உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையில் பவுர்ணமி கருட சேவை

திருமலையில் பவுர்ணமி கருட சேவை

திருப்பதி: திருமலையில் மாதந்தோறும் பவுர்ணமியை ஒட்டி தேவஸ்தானம் கருடசேவையை நடத்தி வருகிறது. பிரம்மோற்சவத்தின் போது திருமலைக்கு வந்து கருட சேவையை காண முடியாத பக்தர்கள், பவுர்ணமியன்று நடக்கும் கருட சேவையில் பங்கு கொள்ளலாம்.  அதன்படி, நேற்று பவுர்ணமியை முன்னிட்டு, திருமலையில் கருட சேவை நடந்தது. ஏழுமலையானின் உற்சவமூர்த்தியான மலையப்ப சுவாமி கருட வாகனத்தில், மாடவீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இதில், திருமலை ஜீயர்கள், தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்டோரும், திரளான பக்தர்களும் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !