மார்கழி மண்டல உற்ஸவம் கொடியேற்று விழா
ADDED :1470 days ago
ஆண்டிபட்டி : சக்கம்பட்டி நன்மைதருவார் ஐயப்ப சுவாமி கோயிலில் 18ம் ஆண்டு மார்கழி மண்டல உற்ஸவத்தின் கொடியேற்று விழா நடந்தது.
இக்கோயில் விழாவில் டிசம்பர் 26, 27 தேதிகளில் 49 அடி உயர மாகாளி அம்மன் சிலைக்கு 108 பால்குட அபிஷேகத்துடன் பூச்சொரிதல் விழா, ஐயப்ப சுவாமி ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கொடியேற்று விழாவில் கோயில் கமிட்டி உறுப்பினர் தெய்வேந்திரன் தலைமை வகித்தார். கோயில் நிர்வாகி முத்துவன்னியன் வரவேற்றார். ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் செல்வம், இளைஞரணி செயலாளர் மனோஜ் குமார், கமிட்டி உறுப்பினர் கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தனர். கோயில் கமிட்டி உறுப்பினர்கள் கணேசன், பாலமுருகன், ரமணி கணபதி, பாண்டீஸ்வரன் மற்றும் மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.