ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனம்
ADDED :1728 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி நடராஜர் ஆருத்ரா தரிசனத்தில் காட்சியளித்ததும், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசன விழா யொட்டி டிச., 11ல் சுவாமி நடராஜருக்கு கோயில் குருக்கள் காப்புகட்டினர். இதனைதொடர்ந்து தினமும் பல்லாக்கில் மாணிக்கவாசகர் கோயில் 3ம் பிரகாரத்தில் வலம் வந்து நடராஜர் சன்னதி முன் திருப்பாவை பாடும் நிகழ்ச்சி நடந்தது. 10ம் நாளான நேற்று காலை நடராஜர் சன்னதி முன் மாணிக்கவாசகர் திருப்பாவை பாடியதும், சன்னதி முன்பு இருந்த ஏழு திரைகள் விலகியதும், சுவாமி நடராஜர் ஆருத்ரா தரிசனத்தில் காட்சியளித்தார். அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.