பழநியில் ஆருத்ரா தரிசனம்: நடராஜருக்கு அபிஷேகம்
ADDED :1659 days ago
பழநி: பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தின் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. பழநியில் திருவாதிரை ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு டிச.19ல் அம்மனுக்கு ஊஞ்சல் ஆடும் நிகழ்ச்சி பெரியநாயகியம்மன் கோயிலில் நடைபெற்றது. நேற்று அதிகாலையில் நடராஜர் சிவகாமி அம்மனுக்கு சிறப்பு ஹோமம் நடைபெற்றது. அதன்பின் சிவகாமி சமேத நடராஜருக்கு பால், நெய், இளநீர், பஞ்சாமிர்தம், பழச்சாறு, சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பலவகையான அபிஷேகம் நடைபெற்றது. சாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. விநாயகர், சிவகாமியம்மன், நடராஜர் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.