சிதம்பர ரகசியம்
ADDED :1410 days ago
சிதம்பரம் நடராஜர் சன்னதியின் வலதுபுறம் சிறு வாசல் உள்ளது. திரையால் மூடப்பட்டிருக்கும் இதனுள் தங்கத்தால் ஆன வில்வ மாலை தொங்க விடப்பட்டிருக்கும். பூஜையின் போது திரை விலக்கப்பட்டு ஆரத்தி காட்டப்படும். அப்போது குனிந்து பார்த்தால் ஆகாயம் தான் தெரியும். கடவுள் ஆகாயம் போல் பரந்து விரிந்தவன். ஆகாயத்துக்கு ஆரம்பமும் கிடையாது, முடிவும் கிடையாது. முதலும் முடிவும் இல்லாதவர் கடவுள் என்பதை இது குறிக்கிறது. பஞ்சபூதத் தலங்களில் இது ஆகாயத்தலம்.