தங்கம் வாங்கும் யோகம்
ADDED :1412 days ago
சிதம்பரம் நடராஜர் கோயிலில் பூஜை செய்யும் தில்லை வாழ் அந்தணர் என்னும் தீட்சிதர்களுக்கு அந்தக் காலத்தில் சம்பளம் கொடுக்கும் வழக்கம் இல்லை. இரவு பூஜை முடித்து நடை சாத்தும் போது கோயிலில் உள்ள சுவர்ண கால பைரவர் சன்னதியில் ஒரு செப்புத் தகட்டை வைத்து விட்டு புறப்படுவர். மறுநாள் காலையில் பைரவர் அருளால் அது தங்கத்தகடாக மாறி விடும். அதையே தமக்குரிய சம்பளமாக ஏற்றுக் கொள்வர். இந்த பைவரை ஞாயிறு ராகு காலத்தில் (மாலை 4:30– 6:00 மணி) வழிபட்டால் தங்கம் வாங்கும் யோகம் அமையும்.