உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வண்ணார்பேட்டை செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

வண்ணார்பேட்டை செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

திருநெல்வேலி : வண்ணார்பேட்டை செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடந்தது. வண்ணார்பேட்டை, சாலைத் தெருவில் உள்ள செல்வ விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 3ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜை, கும்ப பூஜை, மகா கணபதி ஹோமம் போன்றவற்றுடன் துவங்கியது. மாலையில் முதற்கால யாக சாலை பூஜை, ஹோமமும், 4ம் தேதி காலை 2ம் கால யாக சாலை பூஜை, பூர்ணாகுதியும், இரவு யந்திரஸ்தாபனம், அஷ்டபந்தன சமர்பணம் போன்றவை நடந்தது. நேற்று(5ம் தேதி) காலை விக்னேஸ்வர பூஜை, நான்காம் கால யாகசாலை பூஜை, மகா பூர்ணாஹூதி, யாத்ராதானம், கடம் புறப்பாடு நடந்தது. காலை 9. 30 மணிக்கு நூதன விவமானம், செல்வ விநாயகர், பால முருகன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதனையடுத்து மகா அபிஷேகம் மற்றும் அலங்காரமும், மதியம் 12 மணிக்கு மகேஸ்வர பூஜை மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. கும்பாபிஷேகத்தில் பரம்பரை அக்தார் முத்துராஜ், செயலாளர் மந்திரி செட்டியார், பொருளாளர் கந்தசாமி, கமிட்டி உறுப்பினர்கள் பொன்னையா செட்டியார், மகாலிங்கம், முருகன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !