உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தென்காசி கோயிலில் இன்று வருஷாபிஷேகம்

தென்காசி கோயிலில் இன்று வருஷாபிஷேகம்

தென்காசி : தென்காசி வரசித்தி விநாயகர் கோயிலில் இன்று (6ம் தேதி) வருஷாபிஷேகம் நடக்கிறது. தென்காசி குலசேகரநாதர் கோவில் தெரு வரசித்தி விநாயகர் கோயிலில் இன்று (6ம் தேதி) வருஷாபிஷேகம் நடக்கிறது. காலையில் கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் துவங்குகிறது. தொடர்ந்து ருத்ர ஜெபம், அபிஷேகம் மற்றும் மகாபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலையில் தீபாராதனை மற்றும் புஷ்பாஞ்சலி வழிபாடு நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக் கமிட்டியார் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !