உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் உண்டியலில் ரூ.21 லட்சம் வசூல்

திருப்பரங்குன்றம் உண்டியலில் ரூ.21 லட்சம் வசூல்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில், உப கோயில்களின் உண்டியல்கள் துணை கமிஷனர் ராமசாமி, உதவி கமிஷனர் விஜயன், தக்கார் பிரதிநிதி ஜெயதேவி முன்னிலையில் எண்ணப்பட்டன. ரொக்கமாக ரூ. 21,18,923, தங்கம் 134 கிராம், வெள்ளி ஒரு கிலோ 80 கிராம் கிடைத்தன. கோயில் பணியாளர்கள், ஸ்ரீ ஸ்கந்த குரு வித்யாலயா வேதபாடசாலை மாணவர்கள், ஐயப்ப சேவா சங்கத்தினர் உண்டியல் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !