உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்பட்டியில் அன்னதான இலைகளில் ஐயப்ப பக்தர்கள் அங்கப்பிரதட்சணம்

கோவில்பட்டியில் அன்னதான இலைகளில் ஐயப்ப பக்தர்கள் அங்கப்பிரதட்சணம்

கோவில்பட்டி: கோவில்பட்டியில் அன்னதான இலைகளில் ஐயப்ப பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. கோவில்பட்டி லோக்வீர் ஐயப்ப சேவா சங்கம் சார்பில், 47ம் ஆண்டு விழா மண்டல பூஜை மற்றும் அன்னதான விழா நடந்தது. இதை முன்னிட்டு, கோவில்பட்டி சென்பககவல்லி அம்மன் கோயில் முன்புறம் உள்ள தேவி ஸ்ரீ காயத்ரி வித்யாலயா திருமண மண்டபத்தில், காலை 5 மணிக்கு சாஸ்தா ஹோமம், விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, காலை 9 மணிக்கு வில்பட்டி கவல்லி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ ஹரிஹரபுத்ர ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர், திருமண மண்டபத்தில் அன்னதானம் நடந்தது. அன்னதானத்தின் கடைசி பந்தி முடிந்த பின், அந்த இலைகளை எடுக்காமல், அதில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள், குழந்தைகள், பெண்கள் அங்கப்பிரதட்சணம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !