உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றத்தில் அனுமன் ஜெயந்தி விழா துவக்கம்

திருப்பரங்குன்றத்தில் அனுமன் ஜெயந்தி விழா துவக்கம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ரயில்வே பீடர் ரோடு வீர ஆஞ்சநேய சுவாமி கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா துவங்கியது. மூலவர், உற்சவருக்கு அபிஷேகங்கள், பூஜைகள் முடிந்து மூலவருக்கு முத்தங்கி அலங்காரமானது. ஜன. 1வரை யாகசாலை பூஜைகளும், சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகளும், மாலையில் ஆன்மிக சொற்பொழிவும் நடக்கிறது. ஜன‌ 2 மஹா சுதர்சன ஹோமம் முடிந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரமாகி, அன்னதானம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !