கோயில் திருவிழா: பறவை காவடி எடுத்து நேர்த்தி கடன்
ADDED :1458 days ago
மூணாறு: மூணாறில் நியூ காலனியில் பூமாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. அதில் பறவை காவடி மற்றும் முளைப்பாரி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். அவை மூணாறு நகரில் வலம் வந்து பிறகு இரண்டு கி.மீ. தொலைவில் உள்ள கோயிலைச் சென்றடைந்தது. அவற்றை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்ந்தனர்.