உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூலநாதசுவாமி கோயிலில் தேய்பிறை அஷ்டமி உற்சவம்

மூலநாதசுவாமி கோயிலில் தேய்பிறை அஷ்டமி உற்சவம்

சோழவந்தான்: தென்கரை அகிலாண்டேஸ்வரி மூலநாதசுவாமி கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு அனைத்து ஜீவராசிகளுக்கு படியளக்கும் உற்சவம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்பாள், பிரியாவிடை சமேத சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி கோயில் உட்பிரகாரத்தில் வலம் வந்தனர்.டிச.,26 மார்கழி மாத ஏகதின லட்சார்ச்சனையை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. வீணை, புல்லாங்குழல்,மிருதங்கம் இசைக்கப்பட்டது.மாணவி அட்சயாவின் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !