ஐயப்ப பக்தர்கள் அன்னதானம்
ADDED :1416 days ago
திருப்பூர்: திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, பாளையக்காடு வடக்கு, ஆர்.எஸ்., புரம் முதல் வீதி, செல்வ விநாயகர் கோவிலில், ஸ்ரீ சபரி சாஸ்தா, சபரி யாத்திரை குழு சார்பில், 15 ம் ஆண்டு அன்னதான விழா, 16ம் தேதி துவங்கியது. சுவாமிக்கு கொடுமுடியில் ஆராட்டு உற்சவம் நடத்தப்பட்டது. நேற்று காலை மகேஸ்வர பூஜை நடந்தது. காலை, 10:00 மணி முதல் மாலை, 3:00 மணி வரை நுாற்றுக்கணக்கான பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.பெண்கள், குழந்தைகள் பலர் பங்கேற்றனர். இரவு கோவிலில் துவங்கி ஆர்.எஸ்., புரம், கணேசபுரம் வீதிகளில் சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் திருவீதியுலா வந்தது.