ராமேஸ்வரத்தில் ஜீவராசிகளுக்கு சுவாமி, அம்மன் படியளத்தனர்
ADDED :1492 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி அம்மன் புறப்பாடாகி ஜீவராசிகளுக்கு படியளத்தல் நிகழ்ச்சி நடந்தது.
நேற்று மார்கழி அஷ்டமி சப்பரம் நிகழ்வு யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, கோயில் 3ம் பிரகாரத்தில் வலம் வந்து ஜீவராசிகளுக்கு படியளத்தல் (உணவு வழங்குதல்) நிகழ்ச்சி நடந்தது. பின் சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது.
பக்தர்கள் எதிர்ப்பு : ஒவ்வொரு ஆண்டும் சுவாமி, அம்மன் படியளத்தல் நிகழ்ச்சி கோயில் ரதவீதி, தெருக்களில் உலா வருவது வழக்கம். ஆனால் நேற்று கொரோனாவை காரணம் காட்டி கோயில் நிர்வாகம், வீதி உலாவுக்கு தடை விதித்ததற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்.