உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா நடத்த பக்தர்கள் கோரிக்கை

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா நடத்த பக்தர்கள் கோரிக்கை

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் இந்த ஆண்டு தெப்பத் திருவிழா நடத்த பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் சார்பாக தை மாதம் ஜி.எஸ்.டி, ரோட்டு பகுதியிலுள்ள தெப்பக்குள தண்ணீரில் மிதவை தெப்பம் அமைத்து சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருள தெப்பத் திருவிழா நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா தடை உத்தரவால் தெப்பத்திருவிழா ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டும் அனைத்து திருவிழாக்களும் கோயிலுக்குள் உள் திருவிழாவாக நடத்தப்படுகிறது. சுவாமி வீதி உலா நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் கூறுகையில்: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அனைத்து திருவிழாக்களும் நடத்தப்படுகிறது. ஆனால் திருப்பரங்குன்றத்தில் மட்டும் உள் திருவிழாவாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டாவது தெப்பத் திருவிழா நடத்த வேண்டும். என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !