விருதுநகர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
ADDED :1717 days ago
விருதுநகர் : விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. மூளிபட்டி தவசிலிங்க சுவாமி கோயிலில் உள்ள பைரவருக்கும் அபிஷேகல அலங்காரங்கள் நடந்தது. ராஜபாளையம் மாயூரநாத சுவாமி, சொக்கர், தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி, தெற்கு வெங்காநல்லுார் சிதம்பரேஸ்வரருக்கு கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.: