அத்திக்கோம்பை காளியம்மன் கோயிலில் 108 சங்காபிஷேகம்
ADDED :1401 days ago
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே கஸ்பா அத்திக்கோம்பை காளியம்மன் கோயிலில் 48ம் நாள் மண்டல பூஜையை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடந்தது.
கடந்த நாற்பத்தி எட்டு நாட்களுக்கு முன்பு இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதனைத் தொடர்ந்து 48 நாட்களும் அம்மனுக்கு பூஜைகள் செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று நடந்த 48 வது நாள் பூஜையில் 108 சங்குகள் வைத்து சங்காபிஷேகம் நடந்தது. இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடந்தது. பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு அன்னதானம் நடந்தது. சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.