அட்டகாசம் என்றால் என்ன?
ADDED :1411 days ago
அழகான பெண்களை ‘அட்டகாசமா இருக்காப்பா!’ என்று கலாய்ப்பர். உண்மையில் இது விளையாட்டு அல்ல. பொதுவாக வயிறுப்பகுதி மூன்றாக மடியும். அதில் இரண்டாவது மடிப்பிற்கு ‘அட்டஹாசம்’ என்றே பெயர்.
ஒருமுறை சிவனின் மாமனரான தட்சன், மருமகனை அழைக்காமல் யாகம் நடத்தினார். இதை தடுக்க விரும்பிய தட்சனின் மகளான தாட்சாயிணி யாகத்தீயில் விழுந்து உயிர் விட்டாள். மனைவியின் உடலைச் சுமந்தபடி ருத்ரதாண்டவம் ஆடினார் சிவன். அப்போது அவளின் உடலுறுப்புகள் பூமியில் 51 இடங்களில் விழுந்தன. அவை சக்தி பீடங்கள் எனப்பட்டன. அதில் வயிறுப்பகுதி விழுந்த இடம் அட்டஹாசம். இது மேற்கு வங்காளத்திலுள்ள பிரத்யும்னம் சிருங்களாதேவி கோயிலாக திகழ்கிறது.