பாளை.,ராஜகோபால சுவாமி கோயிலில் மூன்றாம் ஆண்டு வருஷாபிஷேகம் கோலாகலம்
திருநெல்வேலி:பாளை.,அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி கோயிலில் மூன்றாம் ஆண்டு வருஷாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. இதைமுன்னிட்டு திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.பாளை.,அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி கோயிலில் கடந்த 2009ம் ஆண்டு ஜூலை 9ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இøத்ததொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் வருஷாபிஷேகம் நடந்துவருகிறது. மூன்றாம் ஆண்டு வருஷாபிஷேகம் வெகுவிமரிசையாக கோயிலில் நேற்று நடந்தது. இதைமுன்னிட்டு காலையில் சுவாமிக்கு விசேஷ ஹோமங்கள் திருமஞ்சனமும் நடந்தது. சுவாமி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அப்போது பக்தர் ஒருவர் 10 பவுன் தங்ககாசு மாலை கோயிலுக்கு வழங்கினார்.தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.இதையடுத்து கஜேந்திர மோட்ச படத்திறக்கப்பட்டது. வருஷாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.கருடசேவை:>இதையடுத்து இரவு 8 மணிக்கு அழகிய மன்னாரும், ராஜகோபாலனும் கருட வாகனத்திலும், தயாரும், கிருஷ்ணரும் அன்ன வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து வீதிஉலா நடந்தது.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.சொற்பொழிவு:கோயில் வளாகத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் சொர்ணவேலின் கிளாரினட் இசை நடந்தது. தொடர்ந்து"யசோதையின் மைந்தனும், குந்தியின் மைந்தனும் தலைப்பில் நெல்லை கண்ணன் சமய சொற்பொழிவும் நடந்தது.ஏற்பாடுகளை கோயில் கைங்கர்ய பா தலைவர் அய்யனார், செயலாளர் தெய்வநாயகன், பொருளாளர் பாலையா மற்றும் நிர்வாகிகள் செய்தனர்.