விவேகானந்தர் தமிழகத்திற்கு விஜயம் செய்த 125 -வது ஆண்டு விழா
சுவாமி விவேகானந்தர் தமிழகத்திற்கு விஜயம் செய்த 125 -வது ஆண்டு விழாவை (1897- 2022) முன்னிட்டு கும்பகோணத்தில் சீரும் சிறப்புமாக ஓராண்டு கொண்டாடப்பட உள்ளது. அதற்காக கும்பகோணம் நகரைச் சேர்ந்த ஸ்ரீ ராமகிருஷ்ண- விவேகானந்த பக்தர்கள் மற்றும் சமுதாய நலம் விரும்பிகள் ஆகியோர் அடங்கிய செயல்வீரர்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று 31.12 .21 நேடிவ் பள்ளியில் நடைபெற்றது. ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர் மூலம் நடத்தப்படும் இந்த விழா பிப்ரவரி 3, 4, 5 தேதிகளில் ஆரம்பிக்க இருக்கிறது. ஓராண்டு தொடர் கொண்டாட்டத்தில் பல்வேறு பண்பாடு, கலாச்சார, இளைஞர் முன்னேற்றம், ஆசிரியர் முன்னேற்றம், சமய மற்றும் சமுதாய நலப் பணிகள் நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் சுவாமிஜியின் சிலைகளை நிறுவுவதற்கும் நிதி வழங்கி உதவலாம் .
Name: Ramakrishna Math
Bank: City Union Bank
Account No. 500101012902446
IFSC: CIUB0000002