உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

திருக்கோவிலூர்,: திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு நந்திகேஸ்வர பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று காலை 9:00 மணிக்கு, பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடந்தது. மாலை 4:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர்க்கு மகா அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம், 5:30 மணிக்கு, நந்திகேஸ்வரருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம் நடந்தது. 6:00 மணிக்கு வீரட்டானேஸ்வரர், நந்திகேஸ்வர பெர்மானுக்கு ஒருசேர சோடசோபவுபச்சார தீபாரதனை, பிரதோஷ நாயகர் அலங்கார மண்டபத்தில் எழுந்தருளி தீபாரதனை, பக்தர்களின் சிவபுராணம் முழங்க பிரதோஷ நாயகர் கோவிலை வலம் வந்து பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான சிவபக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !