உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீர அழகர் கோயிலில் அனுமன் ஜெயந்தி: வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

வீர அழகர் கோயிலில் அனுமன் ஜெயந்தி: வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

மானாமதுரை: மானாமதுரையில் அனுமன் ஜெயந்தி விழாவை ஒட்டி அனுமன் கோயில்களே சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மானாமதுரை வீர அழகர் கோயிலில் உள்ள வீர ஆஞ்சநேயர் மூலவருக்கு அதிகாலையில் 11 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்று வடைமாலை சாத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் இதேபோன்று தியாக வினோத பெருமாள் கோவில், அப்பன் பெருமாள் கோயில், சுந்தரபுரம் விநாயகர் கோயில் பிருந்தாவனம் ஆஞ்சநேயர் கோயில்களில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !