கோடி முறை ஓம் சரவணபவ உச்சரிக்கும் அர்ச்சனை பெருவிழா துவக்கம்
ADDED :1442 days ago
சரவணம்பட்டி: சின்னவேடம்பட்டி சிரவையாதீனத்தில், "ஓம் சரவணபவ" என கோடி முறை உச்சரிக்கும் கோடி அர்ச்சனை பெருவிழா நேற்று துவங்கியது. கவுமார மடலாயம் சார்பில் நடத்தப்படும் கோடி அர்ச்சனை பெருவிழா நேற்று துவங்கியது; வரும் ஜன.8 வரை நடக்கிறது. ஒரு கோடி முறை ஓம் சரவணபவ மந்திரத்தை ஓதும் பணியில் ஏழு ஓதுவா மூர்த்திகளும், 177 திருத்தொண்டர்கள் பங்கேற்று நடத்தி வருகின்றனர். நேற்று காலை துவங்கிய நிகழ்ச்சிக்கு சிரவையாதீனம் குமரகுரு சாமிகள் பங்கேற்று துவக்கி வைத்தார். காலை, முற்பகல், பிற்பகல், மாலை என நான்கு வேளைகளில் 7 நாட்கள் நடக்கிறது. நிறைவுக்கு பின் விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு, கோடி முறை அர்ச்சனை செய்யப்பட்ட திருநீற்று பிரசாதம் வழங்கப்படும். இந்த நிகழ்ச்சி, யூடியூப் சேனலில் நேரடி ஒளிபரப்பும் நடக்கிறது.