நவகிரக கோட்டையில் அமாவாசை வழிபாடு
ADDED :1441 days ago
பல்லடம்: அமாவாசையை முன்னிட்டு, பல்லடம் அடுத்த, சித்தம்பலம் நவகிரக கோட்டையில், சிறப்பு வழிபாடுகள் நடந்தன. மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு, மகா ம்ருத்யுஞ்ஜய வேள்வி வழிபாடு நடந்தது. காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் பங்கேற்று, வேள்வி வழிபாட்டை நடத்தி கொடுத்தார். பூஜிக்கப்பட்ட, 108 தீர்த்த கலசங்களை எடுத்து வந்த பக்தர்கள், சிவபெருமான், பார்வதிக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் தம்பதி சமேதராக சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.