உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி கோயில்களில் அனுமன் ஜெயந்தி: வடை மாலை சாற்றி வழிபாடு

பரமக்குடி கோயில்களில் அனுமன் ஜெயந்தி: வடை மாலை சாற்றி வழிபாடு

பரமக்குடி: பரமக்குடியில் உள்ள பெருமாள் மற்றும் ராமர் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. அனைத்து கோயில்களிலும் வடைமாலை சாற்றி, பிரகாரத்தை சுற்றி வந்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

‌ *பரமக்குடி அனுமார் கோதண்டராமசாமி கோயில் ஜெயந்தி விழாவையொட்டி, தினமும் கோயில் வளாகத்தில் பக்தி உலா நடந்தது. நேற்று காலை 10:00 மணி முதல் புனிதப்புளி ஆஞ்சநேயர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.

*பரமக்குடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று முன்தினம் அதிகாலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 6:00 மணிக்கு உற்சவர் வீதி உலா நடந்தது. அப்போது குழந்தைகள் அனுமன் வேடம் அணிந்து சென்றனர். நேற்று காலை மூலவருக்கு சந்தன காப்பு, நாணயங்கள் மற்றும் பழங்களால் அலங்கரிக்கப்பட்டார். அவருக்கு 108 கலச திருமஞ்சனம் நடந்தது.

‌ *பரமக்குடி வண்டியூர் வீர ஆஞ்சநேயர் கோயிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். பின்னர் சிறப்பு அபிஷேகங்கள் தீபாராதனைக்குப் பின் அன்னதானம் வழங்கப்பட்டது.

*பரமக்குடி வண்டியூர் பால ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகள் அன்னதானம் நடந்தது.

*எமனேஸ்வரம் ஆஞ்சநேயப் பெருமான் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !