உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முகம் பார்த்தே குறி சொல்பவர்

முகம் பார்த்தே குறி சொல்பவர்


பிறரது முகக்குறிப்பைக் கொண்டே அவர்களின் குணநலனைக் கண்டுபிடிப்பது ஒரு கலை. அந்தக் கலைக்குச் சொந்தக்காரர் அனுமன். அவரது புத்திக் கூர்மையை தனது முதல் சந்திப்பிலேயே அறிந்து கொண்டார் ராமர்.
ராம,  லட்சுமணரை முதன் முதலில் கண்டதும் அனுமன், “முரண்பாடு உடைய நீங்கள் யார்? என்ன நோக்கத்துடன் வந்திருக்கிறீர்கள்?” எனக் கேட்டார்.
“எங்களிடம் காணப்படும் முரண்பாடு என்ன?”  என லட்சுமணர் கேட்க, “உங்களைப் பார்த்தால் தேவர்கள் போல் தோன்றுகிறது. ஆனால் உங்கள் பாதங்கள் மனிதர்களைப் மண்ணில் பதிகின்றன. பார்ப்பதற்கு தவசிகள் போல் தோன்றினாலும் கையில் ஆயுதம் (வில்) ஏந்தியிருக்கிறீர்கள். ஞானிகள் போல இருந்தாலும் துன்பத்தால் முகம் வாடியிருக்கிறீர்கள்.  இழந்த பொருளைத் தேடுபவர்கள் போல காட்சி தருகிறீர்கள். இவை எல்லாம் எனக்கு முரண்பாடாகத் தோன்றுகிறது’’ என்றார்.
 “இவன் ஞானம் கொண்டவன். இவனோடு நட்புக் கொள்வது நமக்கு பயனுள்ளதாக இருக்கும்” என்று சொல்லி அனுமனிடம் தங்களை அறிமுகப் படுத்திக்கொண்டார் ராமர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !