மகாகணபதி கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானம்
ADDED :1374 days ago
சோழவந்தான்: சோழவந்தான் அருகே திருவேடகம் சதுர்வேத மகாகணபதி கோயிலில் பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு 23வது ஆண்டு அன்னதானம் வழங்கும் விழா நடந்தது. சிறப்பு அபிஷேகங்களை தொடர்ந்து சுவாமி பஞ்சலோக அலங்காரத்தில் அருள்பாலித்தார். விவேகானந்தா கல்லுரரி முதல்வர் வெங்கடேசன் அன்னதானத்தை துவக்கி வைத்தார். துணை முதல்வர் பார்த்தசாரதி மற்றும் ஊராட்சித் தலைவர்கள் உமாதேவி, பாலு, பழனியம்மாள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை இருளப்பன் செய்தார்.