உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் கோயிலில் மார்கழி பாவை நோன்பு: 23ம் நாள் விழா

ஸ்ரீரங்கம் கோயிலில் மார்கழி பாவை நோன்பு: 23ம் நாள் விழா

திருச்சி:  ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடந்து வரும் மார்கழி பாவை நோன்பு விழாவின் இருபத்தி மூன்றாம் நாளான இன்று திருப்பாவையில் ஆண்டாள் பாடியருளிய..

மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரியசிங்கம் அறிவுற்றுத்தீவிழித்து
வேரிமயிர்பொங்க எப்பாடும்பேர்ந்துதறி
மூரிநிமிர்ந்து முழங்கிப்புறப்பட்டு

என்ற திருப்பாவை இருபத்தி மூன்றாம் பாசுரத்திற்கு ஏற்ப உற்சவர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரை,  " சீரிய சிங்காசனத்தில் சிங்கம்"  திருக்கோலத்தில் அலங்காரம் செய்வித்து தினப்படி பூஜைகள் நடந்தேறியது. பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !