உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்களில் பக்தர்களுக்கு தடை; மருதமலை அடிவாரத்தில் வழிபட்ட பக்தர்கள்

கோவில்களில் பக்தர்களுக்கு தடை; மருதமலை அடிவாரத்தில் வழிபட்ட பக்தர்கள்

வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில், பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலில், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டதால், கோவில் வாசலில் நின்று பக்தர்கள் வழிபட்டு சென்றனர். தமிழகத்தில், கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. இத்தடை நேற்று முதல் அமலுக்கு வந்தது. வெள்ளிக்கிழமையான நேற்று, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். கோவிலில், பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டதால், அடிவாரத்திலுள்ள படிக்கட்டு பகுதியில், பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டு சென்றனர். அதேபோல, பேரூர் பட்டீஸ்வரர் கோவில், பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் வாசலில் நின்று, பக்தர்கள் சுவாமியை வழிபட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !